இல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவே காண்பிக்கும் வசதி தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இவற்றினை போலியானவை என நேரடியாக கண்டறிவது மிகவும் கடினமாகும். எனவே இலகுவாகக் கண்டறியக்கூடிய நுட்பம் ஒன்றினை அடோப் நிறுவனம் போட்டோ ஷொப்பில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக அடோப் நிறுவனம் தெரிவித்துள்ளது. போலியாக உருவாக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவு தாக்கத்தை செலுத்துவதனாலேயே அதனை தடுக்க இவ்வாறானதொரு முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.