ஜப்பானில், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டோக்கியோ நகரில் உள்ள முதியோர்கள் காப்பகம் ஒன்றிற்கு, அவர்களை கவனித்துக் கொள்ள இந்த ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பயோமெட்ரிக் முறையில் இயங்குகின்றன.
நாய் போன்ற உருவத்தில் உள்ள ரோபோ, பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்களின் தலை, மூக்கு மற்றும் வால் பகுதிகளில் Sensor பொறுத்தப்பட்டுள்ளதால், மனிதர்களின் நிலையை அறிந்து இவை உதவி செய்கின்றன.
இந்த ரோபோக்கள் குறித்து காப்பகத்தில் உள்ள முதியோர்கள் கூறுகையில், இவற்றுடன் தங்களால் பேச முடிவதாகவும், அந்த அளவிற்கு இந்த ரோபோக்கள் மனிதர்களைப் போலவே பேசியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த ரோபோக்கள் உயிரினங்களைப் போலவே இருப்பதாகவும், மிகவும் அழகாக இருப்பதாகவும் முதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நோயாளிகள், ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இந்த ரோபோக்கள் துணையாக செயல்படுகின்றன.