அதிக நேரம் தொலைபேசி உட்பட இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துவது வயதாதலை தூண்டுவதாக வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதன் பாவனை சுருங்கிய நெற்றி, தொய்வுற்ற கழுத்து மற்றும் தளர்வுற்ற தாடைகளைத் தோற்றுவித்து முகத்தின் சாதாரண தன்மையை குலைத்து வயதான தோற்றத்தை அளிப்பதாக சொல்லப்படுகிறது.
அதிகளவு நேரம் இலத்திரனியல் சாதனங்களை பாவிப்பதால் தொடர்ச்சியாக கீழ்நோக்கி வளைந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொலைபேசிகளில் குறுந்தகவல்கள் அனுப்புகையில் அது கழுத்து மற்றும் தோள்மூட்டு வலிகளை ஏற்படுத்துகிறது, அதோடு தலைவலிகள் ஏற்படுகிறது.
உடலின் ஏனைய பாகங்களிலும் வலிகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் தற்போது கிடைக்கும் தகவல்களின் படி கிட்டத்தட்ட 371 மில்லியன் வரையிலானோர் இணையம், தொலைபேசி பாவிப்பவர்கள்.
இதில் 40 வீதமானோர் 19 – 30 வயதுக்கிடைப்பட்ட இளம் வயதினர். இதன் பாவனை இளவட்டத்தினரிடையே விரல் மடங்குதல், மூட்டு வலிகள், தசை வலிகள், என்பு நோய்களை தோற்றுவிக்கலாம் என சொல்லப்படுகிறது.