புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்புக்களை பகிரும் வசதியை இன்ஸ்டாகிரம் தருகின்றது.
பேஸ்புக் நிறுவனத்தினார் நிர்வகிக்கப்பட்டுவரும் இச் சேவையினை உலக அளவில் பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறான இன்ஸ்டாகிராமில் தற்போது பயனர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது கருத்துரைகளை (Comments) ஒன்றன் பின் ஒன்றாக நீக்குவதற்கு பதிலாக பல கருத்துரைகளை ஒன்றாக நீக்கக்கூடிய வசதியே அதுவாகும்.
இது தவிர நிலை நிறுத்தப்பட்ட (Pin Comment) கருத்துரை வசதி வழங்குவது தொடர்பிலும் இன்ஸ்டாகிராம் பரிசீலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் பயனர் ஒருவர் யார் யார் தமது போஸ்ட்டில் தன்னை டேக் செய்யலாம் என்பதனையும் தெரிவு செய்யும் வசதியும் விரைவில் தரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Date: 16.05.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.