முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒரு தசாப்த காலத்தினைக் கடந்தும் மில்லியன் கணக்கான பயனர்களினால் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
இப்படியிருக்கையில் தற்போதைய வடிவமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்தி புதிய வடிவமைப்பினை தருவதற்கு அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
இதற்கான அறிவிப்பினை Twitter Support கணக்கின் ஊடாக வெளியிட்டுள்ளது.
இதன்படி iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன் மற்றும் டுவிட்டர் இணைப் பக்கத்தில் இந்த மாற்றத்தினை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
உரையாடல்களை வாசித்தல் மற்றும் பின்தொடர்தல் என்பவற்றினை இலகுபடுத்துவதற்காக இம் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.
இவ் மாற்றமானது ஏற்கணவே சில பயனர்களிற்கு வழங்கப்பட்டு பரீட்சிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம் மாற்றம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை GIF கோப்பு ஒன்றினூடாகவும் விளக்கியுள்ளது.
இதனை Twitter Support பக்கத்தில் காண முடியும்.
(Date: 09.05.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.