அண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளக்கூடிய செயலி ஒன்று அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இது ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள Skype செயலிக்கு பெரும் போட்டியாக காணப்படுகின்றது.
இந்நிலையில் Zoom செயலிக்கு சவால் விடும் வகையில் புதிய வசதி ஒன்றினை Skype அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஸ்கைப் கணக்கோ அல்லது செயலியோ இன்றி தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய வசதியாகும்.
இதற்காக விசேட இணைப்பு (Link) ஒன்றினை உருவாக்கி அதன் ஊடாக தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்.
இவ் வசதியானது Meet Now என அழைக்கப்படுகின்றது.
குறித்த இணைப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனின் முதலில் ஸ்கைப் கணக்கினுள் நுழைந்து Meet Now என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
இப்போது அழைப்பை ஏற்படுத்தும் இணைப்பு கிடைக்கும்.
இதனை பகிர்ந்து கொள்ள முடிவதுடன் Invite பொத்தானை அழுத்தி மற்றையவர்களை இணைப்பிற்கு அழைக்கவும் முடியும்.
இவ் இணைப்பின் ஊடாக வரையறை அற்ற அழைப்பினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் சிறப்பம்சமாகும்.
(Date: 09.04.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.