சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் தற்கொலைகளுடன் தொடர்புடைய பதிவுகளை கொண்ட 3.2 பில்லியன் போலிக் கணக்குகளை நீக்கியுள்ளதாக Facebook Inc நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த போலிக் கணக்குகளினால் மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுகள் இடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக Facebook Inc நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரை இவ்வாறு போலிக் கணக்குகளை நீக்கியுள்ளதாக இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 1.55 பில்லியன் போலிக்கணக்குகள் நீக்கப்பட்டதுடன் இந்த வருடம் அந்த தொகையை விட 2 மடங்கு போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் Facebook Inc நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய 11.6 மில்லியன் பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று 2.5 மில்லியன் தற்கொலை அல்லது தம்மைத் தாமே காயப்படுத்தி கொண்ட பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் Facebook Inc நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய 4.4 மில்லியன் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக Facebook Inc நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
(Date: 15.11.2019)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.