துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்!

சில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள் தாம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதை MeToo எனும் டேக் மூலம் பகிரங்கப்படுத்தியிருந்தனர்.

இறுதியில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களும் இதில் இணைந்து தாம் முகம் கொடுத்த பிரச்சினைகளையும் வெளியிட்டனர்.

இதற்கு கூகுள் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல. உலகெங்கிலும் பணியாற்றும் சுமார் 20,000 கூகுள் பணியாளர்கள் தாம் சக ஊழியர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சை இது தொடர்பாக சக ஊழியர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் தொடர முடியும் என அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் புதிய இணையத்தளம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத் தளத்தின் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் தமது விபரங்களை தெரியப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

ஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி!

கூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை

பூப்பந்து சாம்பியன்ஸ் போட்டித் தொடர் தொடர்பில் பேச்சுவார்த்தை!

இலங்கையில் ஆசிய இளையோர் பூப்பந்து சாம்பியன்ஸ் விளை

புதிய தொகுப்புகள்