சமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அதேவேளை அதனூடாக ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.
எனவே பிரச்சினைகளிலிருந்து பயனர்களை விடுவிக்க சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதேபோன்று டுவிட்டர் நிறுவனமும் தனது பயனர்கள் எதிர்நோக்கும் அசௌகரியத்திலிருந்து விடுபட புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
அதாவது ஒருவருடைய டுவீட்டிற்கு வழங்கப்படும் ரிப்ளைகளை டுவீட்டிற்கு சொந்தக்காரர் மறைக்கக்கூடிய (Hide Tweet) வசதியாகும்.
இதன் ஊடாக அநாவசியமான ரிப்ளைகளை மற்றவர்கள் பார்ப்பதை தவிர்க்க முடியும். எனினும் இவ் வசதி தற்போது பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளது.
இது வெற்றியளிப்பின் விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.