கணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளிலேயே அதிகளவானவர்கள் மின்னஞ்சல் சேவையினை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கான அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்படியிருக்கையில் கூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் இயங்குதள பாவனையாளர்களுக்கு புதிய அனுபவத்தினைத் தரக்கூடிய புதிய ஜிமெயில் வடிவமைப்பினை அறிமுகம் செய்துள்ளது.
அதிகளவில் வெள்ளை நிறப் பின்னணி கொண்ட இவ்வடிவமைப்பானது பயன்படுத்துவதற்கு இலகுவான முறையில் காணப்படுகின்றது.
கடந்த மாதம் ஜிமெயிலின் புதிய வடிவமைப்பு தொடர்பான கூகுள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அன்ரோயிட் சாதனங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.