500px சேவையை பயன்படுத்துபவருக்கு அதிர்ச்சி தகவல்!

ரொறன்ரோ மற்றும் கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் புகைப்பட சமூகவலைத்தளமாக 500px விளங்குகின்றது.

இத்தளத்தினை பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 14.8 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற போதிலும் தற்போதே இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பயனர்களின் சொந்தப் பெயர்கள், பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள் உட்பட ஏராளமான தகவல்கள் இவ்வாறு கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பல முன்னணி இணையத்தளங்களில் இருந்து பயனர்களின் தகவல்கள் கசிந்து வருகின்றமையை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி இணையப் பாவனையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

You may also like ...

மொத்த மனித இனத்தையும் சிலந்திகளால் தின்று தீர்க்க முடியும்: வெளியான அதிர்ச்சி தக

உலகில் உள்ள மொத்த சிலந்திகளின் கூட்டமும் ஒருங்கிணை

அதிர்ச்சி தகவல்! 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு!

பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்

புதிய தொகுப்புகள்