பிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
பயனர்களின் நம்பிக்கையை வெல்வதற்காகவே இப் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இதன்படி பல டுவீட்களை ஒரே நேரத்தில் அழிக்கக்கூடிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
முன்னர் டுவீட்களை தனித்தனியாகவே அழிக்கக்கூடிய வசதி தரப்பட்டிருந்தத
அடுத்ததாக தானாகவே அழியக்கூடிய டுவீட்களை செய்யும் வசதி.
இதன் மூலம் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் டுவீட்கள் தானாகவே அழியக்கூடியவாறு மாற்றியமைக்க முடியும்.
மூன்றாவது ஸ்வைப் மூ ப்ளாக் வசதியாகும்.
அதாவது தம்மை பின்தொடர்பவர்கள் யாராவது இடையூறாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களை ப்ளாக் செய்யலாம்.
இவ் வசதி தற்போதும் காணப்படுகின்றது. எனினும் ஸ்வைப் மூலமாக இலகுவான முறையில் ப்ளாக் செய்யக்கூடியதாக இருக்கின்றமையே புதிய வசதியின் சிறப்பியல்பு ஆகும்.