விரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்!

கூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இணைய உலாவியாக Mozilla Firefox காணப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில் இவ் வருடம் தனது 66 வது பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.

இப் புதிய பதிப்பில் புதிய வசதி ஒன்றினை உள்ளடக்கவுள்ளது. அதாவது இணையத்தளங்களை பார்வையிடும்போது குறித்த தளங்களில் தானாகவே இயங்கக்கூடிய வீடியோக்கள் காணப்படின் அவற்றினை அவ்வாறு இயங்காது செய்யக்கூடிய வசதியாகும்.

இவ் வசதி ஏற்கனவே கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தானாக பிளே ஆகும் வீடியோக்கள் பயனர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், இன்டர்நெட் டேட்டாவும் அதிகமாக பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

ஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி!

கூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை

சாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்!

சாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத

புதிய தொகுப்புகள்