தொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.
இறுதியாக OLED எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இத் தொழில்நுட்பத்தினை பல்வேறு நிறுவனங்களும் பயன்படுத்திவரும் நிலையில் தற்போது சாம்சுங் நிறுவனம் மற்றுமொரு புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்கின்றது.
இத் தொழில்நுட்பத்திற்கு MicroLED என பெயரிடப்பட்டுள்ளது.
MicroLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட முதலாவது திரையினை இவ் வருடம் சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
மிகவும் துல்லியம் வாய்ந்த, மெலிதான திரைகளை குறித்த தொழில்நுட்பத்தின் ஊடாக வடிவமைக்க முடியும்.
முதன் முறையாக 75 அங்குல தொலைக்காட்சி இவ்வாறு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சாம்சுங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.