பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வீடியோ மற்றும் குரல்வழி சட்டிங் அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக பேஸ்புக் மெசஞ்சர் காணப்படுகின்றது.
இந்த அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதியினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
தற்போது வெள்ளை பின்னணியைக் கொண்ட இந்த அப்பிளிக்கேஷனை இருள் சூழ்ந்த வேளையில் பயன்படுத்தும்போது கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவோ அல்லது அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடியதாகவோ இருக்கின்றது.
இப் பிரச்சினைக்கு தீர்வாகவே இருண்ட பின்னணியை (Dark Mode) கொண்டதாகவும் மாற்றியமைக்கக்கூடிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் வசதி தற்போது சில நாடுகளில் மாத்திரம் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.
இது வெற்றியளிக்கும் பட்சத்தில் அனைத்து நாடுகளிலும் உள்ள பேஸ்புக் பயனர்கள் Dark Mode வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.