Acer நிறுவனம் தனது புத்தம் புதிய மடிக்கணனியான Chromebook 13 Tegra K1 இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
13 அங்குல அளவு, 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ள இம் மடிக்கணனியானது பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
தொடர்ச்சியாக 11 மணித்தியாலங்கள் மின்னை வழங்கக்கூடிய மின்கலத்தினை கொண்டுள்ளது.
மேலும் 2 x USB 3.0 Ports, Bluetooth 4.0, HDMI Port, SD Card Slot ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ள இக்கணனியின் விலையானது 279 டொலர்கள் ஆகும்.