கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணினிகளில் இரண்டாம் தலைமுறை கீபோர்ட்டினை அறிமுகம் செய்து வைத்திருந்தது.
எனினும் இக் கீபோர்ட் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருக்கவில்லை.
குறித்த வகை கீபோர்ட்டினுள் தூசு துணிக்கைகள் சென்று அசௌகரியத்தை அளித்தமையே இதற்கு காரணம் ஆகும்.
எனவே தூசு, துணிக்கைகள் செல்லாத நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட கீபோர்ட் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கடந்த வருடம் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் கண்ணாடியினால் ஆன (Glass) கீபோர்ட்டினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இத் தொழில்நுட்பமானது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.