Language :     Englishதமிழ்

முககவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் எப்படி?

ரூபாய் நோட்டுகள், முககவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் டிஸூ பேப்பர், முககவசம், ரூபாய் நோட்டுகள் ஆகியவை உள்ளன.

இதில், முககவசத்தில் கொரோனா 7நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர், பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர்வாழும் என்று ஹொங்ஹொங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக பிரபல மருத்துவ இதழான The Lancet கூறியுள்ளது.

அதே சமயம் வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் அல்லது சோப் உபயோகித்து கொரோனா வைரஸைகொன்றுவிடலாம் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சடிக்கப்பட்ட காகிதம், டிஸூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா மூன்று மணி நேரத்திற்கு குறைவாகவே உயிர்வாழ முடியும் என்றும், மரப்பலகை, துணிகளில் இரண்டு நாட்கள் உயிரோடு இருக்க வாய்புள்ளதாகவும் Leo Poon Litman,Malik Periris ஆகிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

>LS


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

Google Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி?

இணையத்தள முகவரிகளை சமூகவலைத்தளங்கள் உட்பட பல்வேறு

Zoom அப்பிளிக்கேஷனில் பின்னணியை மாற்றுவது எப்படி?

தற்போது உலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வீடியோ க

புதிய தொகுப்புகள்