நீங்கள் மூளையில் எப்பாகத்தை பயன்படுத்துகிறீர்கள்?

பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம்.  இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள்,

  அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய  சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் இந்த இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் உங்களுக்கு சட்டென புரிந்து கொள்ள முடியும்)

பரீட்சையின் இறுதியில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சிலவேளை தவறாக கொடுக்கலாம். ஆக கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க,  மூளை என்ன சொல்கிறதோ அது படி பதில் அளியுங்கள். நிச்சயம் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச்செல்கிறது இப்பரீட்சை.

You may also like ...

கணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா?

கணினியால் உருவாகும் பாதிப்புகளில் இருந்து விடுபட

உங்கள் வாழ்க்கையை வளமாக்க நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் !

நமது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வ

புதிய தொகுப்புகள்