மின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.

நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பயன்படுத்தி ஒளி பெற்று வந்தார்கள். பட்டனைத் தட்டியதும் பல்பு எரியக்கூடிய மின்சாரம் அப்போது கிடையாது. இப்போதோ ஏராளமான வடிவங்களில் மின்சார விளக்குகள் நமது வாழ்க்கையில் பயன்படுகின்றன. தொழிற்காலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்கள் எல்லாமே மின்சாரத்தினால் இயக்கப்படுகின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்துகிற ரயில், விமானம், தண்ணீர் இறைக்கும் மோட்டார் போன்ற முக்கியமானவை எல்லாமே மின்சாரத்தின் பயனால் உருவானவையே. மனித குலமான நமக்கு மின்சாரம் ஒரு வரப்பிரசாதமாகும்.

மின்சாரத்தை உண்டாக்கும் இயந்திரத்தை ”டைனமோ” அல்லது “ஜெனரேட்டர்” என்று கூறுகிறார்கள். இதில் பெரியதும், சக்தி வாய்ந்ததுமான காந்தம் உள்ளது. இந்த காந்த்த்தை “புலக் காந்தம்“ (Field Magnet) என்று வழங்குகிறார்கள். புலக் காந்த்த்தின் இரண்டு உலோக வளையங்களால் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வளையங்கள் வெளியேயுள்ள கார்பன் துண்டு ஒன்றைத் தொட்டுக் கொண்டிருக்கும்.

டைனமோவில் உண்டாக்கப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள் கார்பன் துண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். முன்னரே கூறியபடி செம்புக் கம்பிகளால் செய்யப்பட்ட நீளமான, சதுர வடிவிலான கம்பி, காந்த்த்தின் இரண்டு முனைகளுக்கு இடையிலே சுழலும்போது மின் காந்த்த் தூண்டல் (Electro Magnetic Induction) ஏற்பட்டு இதன் காரணமாக மின்சாரம் உற்பத்தியாகிறது. இப்படி உற்பத்தியாகும் மின்சாரம், உலோக வளையங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் கார்பன் துண்டு வழியாக மின்சாரக் கம்பிகளில் பாய்கிறது. இந்தக் கம்பிகளை நமது வீடுகள் அல்லது தொழிற்சாலைகள் வரையிலும் இணைத்துக் கொண்டு நாம் மின்சாரம் பெறுகிறோம்.

டைனமோவில் செம்புக் கம்பிச் சுருளை சுழலச் செய்ய இரண்டு முறைகள் உள்ளன. முதல் முறையின்படி ஆறுகளின் நடுவே அணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி, தோக்கிய தண்ணீரை மிகவும் உயரமான இடத்திலிருந்து கீழே விழச் செய்கிறார்கள். இந்த நீர் டர்பைன் பிளேடுகளில் விழுந்து, டர்பைன் சுற்றி, இதன் மூலம் டைனமோவின் கம்பிச்சுருள் சுழலுகிறது. இதன் விளைவாக மின்சாரம் உண்டாகிறது. இந்த முறையில் செயல்படும் மையங்களை நீர் மின் நிலையங்கள் என்று அழைக்கிறார்கள்.

இரண்டாவது முறையின் படி நிலக்கரியை எரித்து நீரைக் கொதிக்க வைத்து, கிடைக்கும் நீராவியைக் கொண்டு டர்பைன் சுழலுகிறது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை அனல் மின்நிலையங்கள் என்று வழங்குகிறார்கள். இந்த இரண்டுவகையான முறைகள் தவிர அணுசக்தியைப் பயன்படுத்தியும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தவகையான நிலையங்களை அணுமின்நிலையங்கள் என்று கூறுகிறார்கள்.

You may also like ...

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை!

வளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப

புதிய தொகுப்புகள்