Language :     Englishதமிழ்

சுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி? சூப்பர் டிப்ஸ் இதோ!

எல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேரத்தில் நாமலே வீட்டில் குக்கரில் சுலபமாக கேக் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இந்த கேக்கை சாப்பிடுவார்கள்.

எப்படி இந்த கேக் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

• மைதா - 1 கப்
• சூரியகாந்தி எண்ணெய் - 1/4 கப்
• ஆப்ப சோடா - 1/4 ஸ்பூன்
• பேகிங் பவுடர் - 1/4 ஸ்பூன்
• வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
• பால் - 1 கப்
• சர்க்கரை - 1 கப் (பொடி)
• கலர் - தேவையான கலர்

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சர்க்கரை அனைத்தையும் ஒன்று சேர்த்து சலித்து கொள்ள வேண்டும். பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், கலர் சேர்க்க வேண்டும்.

பின்னர் பாலை அதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளற வேண்டும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம். குக்கரில் ஆத்து மணல் அல்லது பீச் மணலை பாதி அளவு கொட்டி அடுப்பில் வைக்க வேண்டும்.

கேக் செய்யும் பாத்திரத்தில் அதாவது கணமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எல்லா இடங்களுக்கும் தடவ வேண்டும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவ வேண்டும். இப்படி செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.

கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் எழும்பி வரும்.

இப்போது குக்கரில் இந்த கேக் பாத்திரத்தையும் வைத்து மூடி விட வேண்டும். விசில் போடக் கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தையும் போட கூடாது. 30 நிமிடம் கழித்து குக்கரை அனைத்து விட வேண்டும். 10 நிமிடம் கழித்து எடுத்து, சூடாக பரிலாம்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை - சூப்பர் டிப்ஸ் இதோ!

கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத

கருணை கிழங்கை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

கருணை கிழங்கு மணல், செம்மண்களில் செழித்து வளரக்கூட

புதிய தொகுப்புகள்