தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
பூண்டை பச்சையாகவோ, அல்லது சட்னி செய்தோ அல்லது துவையல் செய்தோ சாப்பிடலாம்.
அருமையான உடலுக்கு ஆரோக்கியமான பூண்டு சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
• பூண்டு - 20 பல்
• காய்ந்த மிளகாய் - 6
• கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
• புளி - தேவையான அளவு
• நல்லெண்ணெய் - தேவையான அளவு
• கறிவேப்பிலை - தேவையான அளவு
• கடுகு - தாளிக்க
செய்முறை:
முதலில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் பூண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடலைப்பருப்பை போட்டு அதையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸியில் வறுத்தெடுத்த பூண்டு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை,புளி, காய்ந்த மிளகாய் இவற்றையெல்லாம் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி கடுகு, கறிவேப்பிலைதாளித்து, அரைத்து வைத்த விழுதை இதில் சேர்த்து இறக்கி வைக்கவும்.
பூண்டை அப்படியே சாப்பிட மறுப்பவர்களுக்கு இப்படி சட்டி அடிக்கடி செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் கொடுக்கும்.
தயிர்சாதம், தோசை, இட்லி போன்ற உணவுகளுக்கு தெட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.