Language :     Englishதமிழ்

வீட்டிலேயே சாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி?

சாக்லேட் லாவா கேக் செய்வது மிகவும் எளிமை. இந்த கேக்கை வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

• டார்க் சாக்லேட் - 135 கிராம்
• வெண்ணெய் - 95 கிராம்
• ஐஸ்ஸிங் சுகர் - 100 கிராம்
• முட்டை - 2
• மைதா - 35 கிராம்

செய்முறை:

மைக்ரோவேவ் அவனை 200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ள வேண்டும்.

மைக்ரோவேவ் பௌலில் சாக்லேட் மற்றும் பட்டர் சேர்த்து உருக்கி கொள்ள வேண்டும்.

மற்றொரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும்.

சாக்லேட் பட்டர் கலவையுடன் சர்க்கரை முட்டை கலவையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் மைதா சேர்த்து நன்கு மெதுவாக கலந்து கொள்ள வேண்டும்.

மைதா கட்டியாக இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை 5-7 நிமிடங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைக்கணும்.

க்ரீஸ் செய்யப்பட்ட ரேம்கினில் இந்த கலவையை ஊற்ற வேண்டும்.

பின்னர் 9-10 நிமிடங்கள் வரை இந்த பேக் செய்யவும்.

சுவையான லாவா கேக் ரெடி.

(Date: 19.04.2020)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

ஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் சேவையானத

கூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி?

கணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய

புதிய தொகுப்புகள்