Language :     Englishதமிழ்

சுவையான எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி?

ஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு வகையாகும்.

அதிலும் எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய் மிகவும் சுவையானதாக இருக்கும்.

அந்தவகையில் தற்போது சுவையான எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

• நறுக்கிய எலுமிச்சை - 6
• சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 1 கப்
• கடுகு விதைகள் - 1 தேக்கரண்டி
• பெருங்காயம் - தேவையான அளவு
• வெந்தய விதைகள் - 2 தேக்கரண்டி
• மிளகாய் பொடி - தேவையான அளவு
• உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். நன்றாக காய்ந்த பிறகு அதில் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய லெமனை சேர்த்து நன்றாக வதக்கவும்.

மற்றொரு கடாயில் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து 3-4 நிமிடங்கள் வறுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள்.

லெமன் நன்றாக மென்மையாக வெந்ததும் அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். 5-6 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும் .

இப்பொழுது காரத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறுங்கள். எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்காதீர்கள். இது உங்கள் ஊறுகாயை கெட்டுப் போக வைத்து விடும்.

இப்பொழுது பொடித்த வெந்தய கடுகு பவுடரை சேர்த்து நன்றாக கிளறுங்கள். 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.

இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு லெமன் ஊறுகாயை காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளுங்கள்.

தேவைப்படும் போது தயிர் சாதம், ரொட்டி, பழைய சாதம், சப்பாத்திக்கு என்று தொட்டு சாப்பிடலாம்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

ஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் சேவையானத

கூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி?

கணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய

Also Viewed !

புதிய தொகுப்புகள்