Language :     Englishதமிழ்

சுவையான அசத்தல் ஜவ்வரிசி வடை செய்வது எப்படி?

விடுமுறை நாட்களில் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் நபருக்கு டக்குன்னு ஈஸியா ஈவினிங் நேரத்தில் குழந்தைகளுக்கும், கணவருக்கும், பெற்றோர்களுக்கும் ஈஸியாக ஜவ்வரிசி வடை செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 150 கிராம்
பச்சைமிளகாய் – 5
மிளகாய்தூள் – தேவையான அளவு
வேகவைத்த உருளைகிழங்கு – 2
கொத்தமல்லி – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
 
செய்முறை:

ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் நன்றாக ஊற வைக்கவும்.

ஊற வைத்த ஜவ்வரிசியை எடுத்து அதனுடன் பச்சை மிளகாய் துண்டுகள், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடைக்கு ஏற்ப தட்டிக்கொள்ளவும்.

வானெலியில் எண்ணெய் காய்ந்தவுடன் அதில் இந்த வடை துண்டுகளை மிதமான தீயில் மெதுவாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

சுவையான ஜவ்வரிசி வடை தயார்.

வீட்டில் இருக்கும் குழந்தைகள் இந்த ஜவ்வரிசி வடையை சூப்பராக சாப்பிடுவார்கள்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

ஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் சேவையானத

கூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி?

கணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய

புதிய தொகுப்புகள்