Language :     Englishதமிழ்

வீட்டிலேயே பரோட்டா கொத்து செய்வது எப்படி? சூப்பர் டிப்ஸ் இதோ....

வீட்டிலேயே எளிய முறையில் செய்ய கூடிய பரோட்டா கொத்து எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

• பரோட்டா – 5
• முட்டை – 2
• கேரட் – 1
• பச்சைமிளகாய் – 2
• வெங்காயம் – 3
• தக்காளி – 1
• கறிவேப்பிலை – தேவையான அளவு
• சோம்பு – 1/2 டீஸ்பூன்
• லெமன் சாறு – 1 டீஸ்பூன்
• இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
• மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பரோட்டாவை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

முட்டையில் சிறிது மிளகு, பொடியாய் அரிந்த பச்சை மிளகாய், கேரட், உப்பு போட்டு கலந்து தோசை போல் ஊற்றி சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், உப்பு தூவி வதக்கவும்.

ஓரளவு வெந்ததும் வெட்டி வைத்துள்ள புரோட்டா, முட்டை சேர்த்து நன்றாக கரண்டியால் கொத்தியவாரு கிளறி, சிறிது லெமன் சாறு பிழிந்து இறக்கவும். இவ்வாறு செய்தால் சுவையான கொத்து பரோட்டா ரெடி.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

ஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் சேவையானத

கூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி?

கணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய

புதிய தொகுப்புகள்