இன்று இணைத்தில் வைரலாகி “டல்கோனா காபி சேலஞ்ச்” என்ற பெயரில் ஒரு சேலஞ்ச் வைரலாகிக் கொண்டு வருகின்றது.
இந்த காபி தயார் செய்யப்படும் வீடியோவை, சமூகவலைத்தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிள்ளார்.
அதுமட்டுமின்றி அதனை வீட்டிலும் பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது நாமும் அந்த காபியை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.
தேவையானவை:
• காபி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
• சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
• சுடுநீர் - 2 டேபிள் ஸ்பூன்
• பால் - அரை டம்ளர்
• ஐஸ் கட்டி - சிறிதளவு
செய்முறை:
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து, பின்னர் குளிர்சாதன பெட்டியில் குளிர வைத்துக்கொள்ளுங்கள்.
அகன்ற கிண்ணத்தில் காபி தூள், சர்க்கரையை போட்டு அதில் சுடுநீரை ஊற்றி நன்கு அடித்து கலக்குங்கள்.
காபி தூள் நன்றாக கலந்து கிரீம் பதத்தில் இருக்க வேண்டும்.
தொடர்ந்து குளிரவைத்த பாலை எடுத்து டம்ளரில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும்.
அதில் ஐஸ்கட்டியை போடவேண்டும். பின்னர் காபி கிரீமை மேல்பரப்பில் ஊற்றி லேசாக கலக்கி பருகலாம்.
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.