பேரித்தம் பழம் கேக்

தேவையான பொருட்கள்:

பேரிச்சம் பழங்கள் – 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்
மைதா – 2 கப்
முட்டை – 3
சீனி (சர்க்கரை) – 1  1/2 கப்
ஆயில் – 1 1/2 கப்
பேக்கிங் பௌடர் – 2 டீஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் – 1 1/2 டீஸ்பூன்
பட்டைதூள் – 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மைதாவையும் பேக்கிங் பௌடர் இரண்டையும் கட்டி இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும்.

மிக்ஸ்சியில் சீனியை (சர்க்கரை) அரைத்து பௌடர் ஆனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி சீனி கரையும் வரை நன்கு அடித்து கொள்ளவும். அத்துடன் ஆயில் ஊற்றி ஒரு ரவுண்ட் மிக்ஸ்சியை ஓட விட்டு கலவை ஒன்றானவுடன் ஊறவைத்திருக்கும் பேரிச்சம் பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைக்கவும்.

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் பேக்கிங் பௌடர், வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பட்டைதூள் போட்டு மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.

கலந்த கலவையை கேக் தட்டில் ஊற்றி Oven இல் பேக் பன்னவும்.

Oven இல் பேக் பன்னும் முறை:

முதலில் Ovenஐ வெறுமனே சூடு பன்னவும். அதாவது கேக் மாவு தயாரிக்கு முன் Ovenஐ On பன்னி விடவும்.

கேக் தட்டில் மாவை ஊற்றி Oven இல் வைத்த உடன் 160 deg.C அளவில் வைத்து விடவும் இந்த கேக் ரெடியாக குறைந்தது 35 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். Ovenஐ பொறுத்து நேரம் மாறுபடலாம்.

குறிப்பு :

பேரிச்சம் பழம் அரைத்து சேர்த்து இருப்பதால் கேக் மாவே பிரவ்ன் நிறத்தில்தான் இருக்கும். கேக் வேக ஆரம்பிக்கும் போதே நன்றாக பிரவ்ன் நிறத்தில் மாறிவிடும். அதை பார்த்ததும் கேக் வெந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். கேக் ரெடியாக குறைந்தது 35 நிமிடமாவது ஆகும். வெந்து விட்டதற்கு அடையாளம், கேக் தட்டின் ஓரங்களிலிருந்து கழன்று வந்திருக்கும். அதே சமயம் நல்ல வாசனையாகவும் இருக்கும்.

You may also like ...

தங்கம் போல மின்னிட இந்த பழம் மட்டும் போதுமே!

பெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் க

தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூ

புதிய தொகுப்புகள்