உங்களுக்கு பிடித்தமான ஜிலேபி செய்வது எப்படி?

கொண்டாட்டத் தினங்களில் பெரும்பாலும் இடம்பெறுவது லட்டு ஜிலேபியாகும். லட்டு செய்வது ஒருவகையில் அனைவருக்கம் தெரியும் ஆனால் ஜிலேபி அவ்வளவு எளிதல்ல என்று நம்மில் பலர் நினைத்து கொண்டிருப்போம் அப்படி இருக்ககையில் எளிதில் செய்யும் ஜிலேபியை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

• உளுத்தம் பருப்பு - 250 கிராம்
• அரிசி - 30 கிராம்
• சர்க்கரை - 1 கிலோ
• லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ்
• டால்டா, நெய், அல்லது ரீபைண்ட் ஆயில்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ் வர்ணத்தை சேர்த்து அடுப்பில் வைக்கவும். சீனி பதம் வந்தவுடன் பாகு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் மிதமான சுடில் வைக்கவும்.

முன்னதாக, உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

இரண்டும் நன்றாக ஊறியதும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.

நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். ஒரு தடவைக்கு 4,5, ஜிலேபி போட்டு எடுக்கவும்.

சுவையான இனிப்பான ஜிலேபி ரெடி.

You may also like ...

பேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி?

இவ் வருடத்தின் ஆரம்பத்தில் வாட்ஸ் ஆப்பினையும், பேஸ

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் செய்வது எப்படி?

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவு

புதிய தொகுப்புகள்