மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

மஞ்சள் கரிசலாங்கண்ணி – 1 கட்டு
அரிசி மாவு – 1 கப்

சாமை மாவு – 1 கப்
சீரகம் – அரை ஸ்பூன்
தோசை மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, சாமை மாவு,தோசை மாவு போட்டு அதில் சீரகம், கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை தோசையாக ஊற்றி எடுக்கவும்.

இந்த தோசை மிகவும் சத்தானது.

வாரம் ஒரு முறை குழந்தைகளுக்குச் செய்துதரலாம். மஞ்சக்காமாலை வராமல் தடுக்கும். பல் வலியைக் குறைக்கும்.

You may also like ...

சத்தான சுவையான பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி?

பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்

ஜிமெயிலில் மின்னஞ்சலை மிகவும் இரகசியமான முறையில் அனுப்புவது எப்படி?

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்ச

புதிய தொகுப்புகள்