கோதுமை ரவை இட்லி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவா – 1 கப்.
தயிர் – 1 1/2 கப்.
கடுகு – 1 தேக்கரண்டி.

உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி.
கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்‍ – 1.
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது.
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – 1 ஸ்பூன்.
கேரட் – 1
பீன்ஸ் – 10

செய்முறை:

கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

பீன்ஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கோதுமை ரவையையும், தயிரையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் சிறிது எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை ரவை கலவையில் கொட்டவும்.

பின்னர் அதனுடன் பீன்ஸ், கேரட், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். சுவையான கோதுமை ரவை இட்லி ரெடி.

இதற்கு காம்பினேஷன் மிளகாய் துவையல் மற்றும் தேங்காய் சட்னியாகும்.

You may also like ...

உங்களுக்கு பிடித்தமான ஜிலேபி செய்வது எப்படி?

கொண்டாட்டத் தினங்களில் பெரும்பாலும் இடம்பெறுவது லட

சத்தான சுவையான பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி?

பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்

புதிய தொகுப்புகள்