ஒரு மனிதனுக்கு சாதாரணமாக கோபம், பொறாமை, வஞ்சகம் இருப்பது இயற்கையானது. ஆனால் அது அதிகரித்து மற்ற மனிதனை தாக்க அல்லது மட்டம்தட்ட நினைப்பதற்கான எண்ணங்கள் எங்கள் உள்ளத்தில் மேலிட்டால் அது உள நோயாக கருதப்படும்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைகிறது. மணமான மறுவாரமே கூட தனிக்குடித்தனத்துக்கு தயாராகும் மனோபாவமும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பல ஆயிரம் பிரச்சினைகளுடன் பிறக்கின்றான். அதே நேரம் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றான்.

சமூகத்தின் எழுச்சி அதன் கல்வி முன்னேற்றத்திலே தங்கியிருக்கின்றது. அப்படியானால், சமூகத்தில் கற்றவர்கள் என்று பெருமை பாராட்டித்திரியும் நாங்கள் எத்தனை கற்றவர்களை உருவாக்க வழிவகை செய்திருக்கின்றோம். சமூகம் முன்னேர வேண்டும் அதில் கற்றவர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று கூறுகின்ற நாம் சமூகம் தலை நிமர்ந்து நிற்க எவ்வழியையும் எதிர்கால சந்ததியினருக்கு காட்ட மறுக்கின்றோம்.

உலக முழுவதும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல நாள் கொண்டாடப்படுகின்றது. இம்முறை இதன் தொனிப்பொருளாக உளபிளவை நோய்குள்ளானவர்களை சமூகத்துடன் இணைத்து வாழ்வோம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது, அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல; என்றாலும், பசி தூக்கம் பார்த்து கவனித்து விட்டால், விளையாடிக்  கொண்டிருப்பார்கள்.

கவலைகள், பதற்றம், பயங்கள் ஆகியவை ஏற்பட ஏதும் ஒரு சம்பவம் தூண்டுதலாக அமைகிறது. நாம் அந்தச் சம்பவத்தை மறக்கும் வரை அவை நம் எண்ணத்தையும், செயல்களையும் பல மணி நேரத்திற்கு, ஏன் சில நாட்களுக்குக்கூட ஆக்கிரமிக்கின்றன. இந்த உணர்வுகள் தவறான, பொருத்தமில்லாத ஞாபகங்கள், எதிர்பார்ப்புகள், தகவல்களை வைத்து உருவாகின்றன. நம் இயல்பான வெளிப்பாடு பாதிக்காமல் நம் உணர்வுகளின் மீதும் சூழலின் மீதும் கட்டுப்பாட்டை மீட்க முடியும்.

பரீட்சை காலத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற பரீட்சை பற்றிய பீதி (Test Phobia) காரணமாக, அவர்கள் பாடத்தில் அதிக தேர்ச்சியை பெற்றிருந்த போதும் பரீட்சையில் உயர்ந்த புள்ளியை பெற்றுக் கொள்வதில்லை.

திருமண பந்தத்திற்கு பிறகு ஆண் பெண் இருபாலரும் தங்கள் வாழ்க்கையை நல்லறமே இல்லறமாய் ஆரம்பிக்கின்றனர். ஆனால் நாட்கள் செல்ல ஒருவருக்கொருவர் பிடிக்காத விடயங்கள் கண்களுக்கு தென்படுகின்றன.

பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால் அன்பு என்ற உணர்வு ஒன்று தான். பெற்றோர்களுக்கு குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது. பொறுப்பான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, வாழ்க்கையில் கடினமாக வேலை செய்து. அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஊக்குவிக்கிறார்கள். பெருமைக்குரிய குழந்தையாக வளர்வது கடினமானதாக இருப்பது போலவே. ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பதும் கடினமானதாகும். கோபத்தின் வடிகாலாக பயன்படுத்தப்படும் கடுமையான வார்த்தைகளை மனிதர்களால் மட்டுமே கூற முடியும்.

Page 2 of 3

புதிய தொகுப்புகள்