சந்தோசம் நிலைத்திருக்க பதினாறு வகையான செல்வங்கள்.

பெதுவாக அனைத்து திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்த நாம் முன்னோர்கள் பதினாறு பெற்று பெறு வாழ்வு வாழ்க என வாழ்த்துவர்.

அத்தகைய பதினாறு வகை செல்வங்களும் நம் வீட்டில் நிறைந்து இருக்க செய்ய வேண்டிய சில வழிகளைப் பற்றி பார்ப்போம்.

புகழ்

ஒருவருக்கு புகழ் என்பது அவர் செய்யும் செயல், நடக்கும் விதம், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.

வெற்றி

வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. வெற்றியை பெற கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

பணம்

செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவை பணத்தையும், பொன்னையும் பெற தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும்.

இரக்கம்

பிறரின் நிலை அறிந்து அவர்களிடன் இரக்கம் காட்டுவது மிகவும் நல்லது. இன்றும் சிலர் பல ஏழைகளுக்கு இரக்கம் காட்டி உதவி செய்து வருகின்றனர்,

அறிவு

அறிவு என்பது நாம் செய்யும் செயல்களின் அடிப்படையில் அமைகின்றன. மேலும் அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.

அழகு

அழகு என்பது மற்றவர் பார்க்கும் பார்வையில் இல்லை. நாம் நினைக்கும் நேர்மறை எண்ணங்களில் தான் உள்ளது.

கல்வி

ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. எவனேவளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.

நோயின்மை

நோயின்மை ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும்.

வலிமை

உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும்.

நல்விதி

விதி என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது

உணவு

உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் தினமும் சரியான நேரத்தில் நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும்.

நன் மக்கள்

குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் இருக்கின்றது.

பெருமை

உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.

இனிமை

பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

துணிவு

துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.

நீண்ட ஆயுள்

மேற்கூறிய எல்லா 15 செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும்.

புதிய தொகுப்புகள்