பரீட்சை பற்றிய பீதி

பரீட்சை காலத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற பரீட்சை பற்றிய பீதி (Test Phobia) காரணமாக, அவர்கள் பாடத்தில் அதிக தேர்ச்சியை பெற்றிருந்த போதும் பரீட்சையில் உயர்ந்த புள்ளியை பெற்றுக் கொள்வதில்லை.

பரீட்சை நெருங்கி விட்டால் விளையாட்டு, திரைப்படம், ஊண், உறக்கம் போன்ற புத்துணர்ச்சி அளிக்கும் எல்லா செயற்பாடுகளையுமே மாணவர்கள் மறந்து விடுகின்றனர் கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டின் மூலை, மரநிழல், கதிரை, கட்டில் என ஏதாவது ஒன்றுடன் ஒன்றித்து விடுகின்றனர். வினாக்களைப் பற்றி கற்பனை செய்கின்றனர்: கனவு காண்கின்றனர் சக மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர் இந்நிலையில், சில மாணவர்கள் பரீட்சை கடினமாக அமைவதாகவும் தாம் பரீட்சையில் தோல்வி அடைவதாகவும் கனவு காண்கின்றனர். பரீட்சையில் தோற்றுவிட்டால் வாழ்வு முடிந்து விட்டதாக அச்ச உணர்வுக்கு உட்படுகின்றனர்.

கல்வி என்பது வாழ்க்கைக்குதான் வாழ்க்கையே கல்வி அல்ல. பரீட்சைகாலங்களின் பாடங்களை கற்க வேண்டிய மாணவர்கள் தலைவலி, கண்வலி, கைவீங்குதல், நெஞ்சு நோவு என வைத்தியசாலையிலும், கிளினிக் சென்றர்களிலும் சென்று தமது பொன்னான நேரத்தினை மண்ணாக்கின்றார்கள் இதற்கு காரணமும் பரீட்சை பீதிதான் தமது பாட நூல்களை எவ்வாறு வகைப்படுத்திக் கற்றல் தமக்கு இலகுவான பாடங்களை எவ்வாறு இணங்காணல், பரீட்சைக்கு தொடர்ச்சியாக வரும் கேள்வி உள்ளடங்கிய பாடங்கள் எவை என்பவற்றை புரிந்து கொள்ள முடியாமையும் மாணவர்கள் பரீட்சையில் பீதியடைவதற்கு தவறுவதற்கு மற்றுமொரு காரணியாக அமைகிறது.

ஆய்வுகளின் படி 98 வீதமான மாணவர்கள் சிறந்த திட்டமிடல் மற்றும் தயார்படுத்தல் இன்மையாலேயே இலகுவில் பரீட்சை பற்றிய பீதிக்குள்ளாவதாக அறியப்பட்டுள்ளது.
அதற்கான காரணங்கள்.

நேர முகாமைத்துவமின்மை
தூக்கமின்மை
பாடங்களில் கவனமின்மை
பரீட்சையில் நம்பிக்கையின்மை
இடைவிடாது கற்றல்

இவைகளை விடுத்து நன்கு திட்டமிட்டு தயார்படுத்தி பரீட்சை நெருங்கும் வரை காத்திராது, நேர காலத்தோடு கற்றலை ஆரம்பிப்பது சிறந்த பெறுபேற்றினை பெற்றுத்தர வழிவகுக்கும்.

தொகுப்பு:
றினோஸ் ஹனீபா

PGD in Peace & Conflict Studies  (UOC) BSW Special  in Counseling(NISD),
Dip in. Professional Counseling (SEUSL)

You may also like ...

எலி ஜுரத்தைப் பற்றிய தகவல்கள்

லெப்டோஸ்பைரோஸிஸ்லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது ஸ்பைரோகீட்

பித்தப்பை அழற்சி பற்றிய குறிப்புகள்

அறிமுகம்பித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பத

புதிய தொகுப்புகள்