உலகத்தில் எந்த உயிரினம் தங்களின் குழந்தைகளை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறது என்று ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்களாம் .
அந்த ஆய்வின் முடிவில் உலகத்திலையே மனிதனைவிட விலங்குகள்தான் தங்களின் குழந்தைகளை அதிக அக்கறையுடன் கவனித்துக்கொள்வதாக அந்த அறிக்கையின் முடிவு தெரிவித்து இருக்கிறது .
அதேபோல் உலகத்தில் தங்களின் குழந்தைகளை மிகவும் மோசமான முறையில் கவனித்துக் கொள்வதில் மனிதர்கள்தான் முதல் இடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்து இருக்கிறதாம் .
அதுமட்டும் இல்லை விலங்குகள் தங்கள் வாழ் நாட்களில் ஒருமுறை கூட தங்களின் குழந்தைகளை துன்புறுத்துவது இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறதாம் . அப்பொழுது எனக்கு இதை ஏற்றுகொள்ள மனம் இல்லை .ஆனால் சில தினங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மடலில் சில புகைப்படங்கள் வந்தது . அதைப் பார்த்த பொழுதுதான் புரிந்துகொண்டேன் .
ஆறறிவு கொண்ட மனிதர்களின் பகுத்தறிவுக்கும் , ஐந்தே அறிவு கொண்ட விலங்குகளின் பகுத்தறிவின்மைகும் உள்ள வேறுபாடு என்னவென்று
மிருகங்கள் மனிதனை மனிதனாகத்தான் பார்கின்றன . ஆனால் மனிதன் மனிதனயே மிருகமாகத்தான் பார்கிறான் . இதுதான் மனிதன் பெற்ற பகுத்தறிவின் தனி சிறப்போ !!!