அல்லாஹ் கூறுகிறான், நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்).
(அல்குர்ஆன்: 4:34)

நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: புரைதா (ரழி)

நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

வெறும் பொய்களாலும், கட்டுக் கதைகளாலும் சோடிக்கப்பட்ட இத்தினதில்தான் பலர் மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். சிலர் மரணித்தே விடுகின்றனர். April fool இது யூத கிறிஸ்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட­­தே. இஸ்லாம் பொய் சொல்வதையும், ஏமாற்றுவதையும், ஒருவரை அதிர்ச்சிக்குள்ளாக்குவ­­தையும் வண்மையாக கண்டிக்கிறதே தவிர அதற்கு ஒரு பொழுதும் அனுமதி வழங்கவில்லை.

இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
ஆம் விபச்சாரியேதான் பயந்து கொள்ளுங்கள்...!

பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)

Page 5 of 9

புதிய தொகுப்புகள்