இஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி - 1435

இஸ்லாமிய வருடத்தில் முதல் மாதமான முஹர்ரம் யுத்தம் செய்வது தடுக்கப்பட்ட மகத்தான நான்கு மாதங்களில் ஒன்றாகும். இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதம் (முஸ்லிம்) என்று நபி ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள். இம்மாதத்தில் நபிமார்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்.

முஹர்ரம் மாத நோன்பு

ரமழான் மாத நோன்பிற்குப் பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவு நேரத் தொழுகையாகும்.(முஸ்லிம்)

ரமழான் அல்லாத வேறு ஒரு மாதம் பூராக நோன்பு நோற்பதாக இருந்தால் முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்கவும். ஏனெனில் இது அல்லாஹ்வுடைய மாதமாகும். அதிலே ஒரு தினம் உண்டு. அத்தினத்தில் அல்லாஹ் சமூகங்களை மன்னித்தான். பிறரையும் மன்னிப்பான்(அஹ்மத்/திர்மிதி).

இந்த மாதம் நோன்பு நோற்று தௌபா செய்து அல்லாஹ்வை நெருங்குவதற்கான மாதம் என்பதனை இது உணர்த்தி நிற்கிறது.

ஆஷுறாஃதாஸுஆ

முஹர்ரம் 9-வது தினம் தாஸுஆ என்றும் 10-வது தினம் ஆஷுறா எனவும் அழைக்கப்படுகிறது.

ஆஷுறா தினத்தில் நோன்பு நோற்பது முன்னைய வருடத்தின் பாவங்களுக்கு மன்னிப்பாக அமையுமென்று நான் கருதுகின்றேன்(முஸ்லிம்)என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இதன் சிறப்புகளை அறிந்த சஹாபாக்கள் பிரயாணத்திலும் நோன்பு நோற்றார்கள்.

ஆஷுறா தினத்தின் காலைப் பொழுதில் மதீனாவை சூழவுள்ள கிராமங்களுக்கு ஒருவரை அனுப்பி யார் நோன்பு நோற்றுள்ளார்களோ அவர்கள் தொடர்ந்து நோன்பு நோற்கட்டும்இ யார் நோன்பு நோற்கவில்லையோ அவர்களும் தொடர்ந்து நோன்பு நோற்கட்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அதிலிருந்து நாங்கள் தொடராக நோன்பு நோற்றோம். சிறுவர்களுக்கும் பழக்கினோம்; (புஹாரிஃமுஸ்லிம்) என்று சஹாபாக்கள் தெரிவிக்கின்றார்கள்.

மதீனாவுக்கு சென்ற நபி (ஸல்) அவர்கள் யூதர்களும் இத்தினத்தை அனுஷ்டிப்பதனை கண்னுற்றார்கள். யூதர்களுக்கு மாறுசெய்ய வேண்டும் என்ற அடிப்படையில் 9வது தினமும் நோன்பு நோற்குமாறு நபியவர்கள் தோழர்களைப் பனித்தார்கள். இவ்கையில் இரு தினங்களிலும் நோன்பு நோற்பதுவே சிறந்ததாகும்.

முஹர்ரமும் ஹிஜ்ரத்தும்

உமர் (ரலி)அவர்களது காலத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் இஸ்லாமியப் வருட ஆரம்பம் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து தொடங்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களது காலத்தில் பல நிகழ்வுகள் காணப்பட்ட போதிலும் சமூக வெற்றிக்கான ஒரு பிரிகோடாக ஹிஜ்ரத்  அமைந்த காரணத்தினால் தான் இது மையப்படுத்தப் பட்டது.

ஹிஜ்ரத் எமக்கு பல பாடங்களை கற்பிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தை மிக நுணுக்கமாக திட்டமிட்டிருந்தார்கள். எதிரிகள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பிரகாரம் அது அமைந்திருந்தது. அத்தோடு அல்லாஹ்வின் மீது பொறுப்பும் சாட்டினார்கள். எமது வாழ்வை திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவதோடு அல்லாஹ்வுடனான தொடர்பையும் பேண  வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளை இங்கு நாங்கள் கண்டுகொள்கிறோம். அத்தோடு நபி (ஸல்) அவர்களின் திட்டமிடல் நுட்பத்தையும் காண்கிறோம். நாம் திட்டமிட தவறுவதன் மூலம் தவறுசெய்யத் திட்டமிடுகிறோம் என்பதனை ஹிஜ்ரத் எமக்கு மிகப்பெரிய அளவில் உணர்த்துகிறது.

வாழ்வை ஒழுங்குபடுத்துவோம்

ஒரு புது வருடம் பிறந்துள்ளது. ஹிஜ்ரி 1435 ல் நாம் நுழைந்திருக்கின்றோம். எமது வாழ்வை திட்டமிடுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தினை நாம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்வின் அனைத்து பகுதிகளையும் தழுவியதாக எமது திட்டமிடல் அமைந்திருக்க வேண்டும்.

1. ஈமானிய விடயங்கள்:
அல்லாஹ்வுடனான எனது தொடர்பு எப்படியிருந்தது? எதிர்வரும் வருடம் எப்படியிருக்க வேண்டும்? எனவே அல்குர்ஆன ஓதல் விளங்குதல் மனனமிடல், கியாமுல்லைல், திக்ர்,கடமையான சுன்னத்தான தொழுகைகள நிறைவேற்றுதல், இஸ்திக்பார் போன்றவற்றையும் எமது திட்டங்களில் உட்படுத்த வேண்டும்.

2. அறிவு சார்ந்த விடயங்கள்:
நாம் எமது கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பொதுவான அறிவை நாம் பெற்றுக் கொள்வதுடன் துறைசார் நிபுணத்துவத்தையும் தத்தம் துறைகளில் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும் 'நிபுணர்களிடம் கேளுங்கள்' (சூரா புர்கான் 59) என்ற அல்குர்ஆன் வசனம் எமக்கு உணர்த்தும் விடயம் மிகத் தெளிவானது. அத்தோடு வாசிப்புப் பழக்கத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்;; 'வாசிப்பீராக' என்ற முதல் கட்டளையை முதன்மை விடயமாக கருத வேண்டும். குறிப்பாக நாம் முஸ்லிம்கள் என்றவகையில் இஸ்லாமிய புத்தகங்களை வாசிக்க வேண்டும். மார்க்க விளக்கங்களை பெற்று அறிவு பூர்வமாக வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.

3. தஃவா சார்ந்த விடயங்கள்
ஈமான், அறிவின் விளைவாக தஃவா அமைகிறது. அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கின்ற இப்பணி நபிமார்கள் செய்த நாமும் செய்ய வேண்டிய ஒரு பணியாகும். அழகிய உபதேசம் மற்றும் அறிவு பூர்வமாகவும் அழைப்பு விடுக்குமாறு (அந்நஹ்ல் 125)அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான். தஃவாப்பணியை சீராக செய்ய அறிவு இன்றியமையாதது. அனைத்து இன மக்களையும் படைத்த அல்லாஹ்வையும் அவனது வழிகாட்டலையும் வழிகாட்டியையும் எம்மோடு சுருக்கிக்கொள்ளாமல் அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

4. உடலாரோக்கியம்
ஆரோக்கியமான உடம்பில்தான் சிறந்த அறிவு காணப்படும் என்று கூறுவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மாத்திரமே எம்மால் இஸ்லாத்துக்காக உழைக்க முடியும்;. இவ்வகையில்தான் நபி (ஸல்) அவர்களும் ஹாரிஸ் இப்னு கல்தா என்ற வைத்தியரிடம் போய் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொண்டதோடு ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களையும் தூண்டினார்கள். வாய்க்கு ருசியான உணவைவிட ஆரோக்கியமான உணவை முற்படுத்துவதுடன் உடம்புக்கு போதுமான அளவு தேக அப்பியாசங்களையும் கொடுக்கவேண்டியுள்ளோம். சுத்தம், சுகாதாரத்தை பேணுவதுடன் போதுமான அளவு ஓய்வையும் உடலுக்கு வழங்க வேண்டியுள்ளோம். உடம்புக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகளை செய்யுமாறு நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளமையை சிந்தித்துணர்வோம்.

5. பொருளாதாரம்
பொருளாதார வளர்ச்சியை மையமாகக்கொண்டும் எமது எதிர்காலத் திட்டமிடலை அமைத்துக் கொள்ள வேண்டும். 'நல்ல ஹலாலான பணம் நல்ல ஒருவனிடம் இருப்பது எத்துனை சிறந்தது'(அஹ்மத்)என்று பொருளாதார மேம்பாட்டை நபி (ஸல்) அவர்கள் தூண்டினார்கள். அத்தோடு செல்வம் முஸ்லிமின் கரங்களில் இருக்க வேண்டும். நாம் செல்வத்தை வெற்றிகொள்ள வேண்டும். செல்வம் எங்களை வெற்றிகொண்டு ஆட்டிப்படைக்கும் விதமாக உள்ளத்தில் முதன்மை இடத்தை அதற்கு வழங்க கூடாது. சிறுவர்களுக்கு சேமிப்பையும் வளர்ந்தோருக்கு முதலீட்டையும் பழக்க வேண்டும்.

6. தொழில்
எமது தொழிலை நாம் மேம்;படுத்திக்கொள்ள வேண்டும். தாவூத் (அலை) அவர்கள் தமது கரங்களால் உழைத்து சாப்பிட்டார்கள்(புஹாரி). அவர் ஒரு மன்னராக இருந்தும் உழைத்துண்டார் சுரண்டவில்லை என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும். அனைத்து நபிமார்களும் தொழில் செய்து தமது வாழ்வை முன்னெடுத்துள்ளனர். ஒரு வாட்டசாட்டமான மனிதனை கண்ணுற்ற போது இவர் ஜிஹாதில் இருந்தால் எத்துனை சிறப்பாயிருக்கும் என்று சஹாபாக்கள் கூறியபோது 'அவர் தனது பிள்ளைகளுக்காக, பெற்றோருக்;காக, தனக்காக உழைத்தால் அவர் இறை பாதையில் இருக்கிறார். ஆனால் அவர் பெருமைக்காக உழைத்தால் ஷைத்தானுடைய பாதையில் இருக்கிறார்.'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(தபரானி)

7. குடும்ப வாழ்வு
அறிவு, ஆன்மீக ரீதியாக தனது மனைவி, பிள்ளைகளையும் முன்னேற்றும் விதமாக சிந்திக்க வேண்டும். இப்பொறுப்பு தொடர்பில் அல்லாஹ் எம்மை விசாரிப்பான் என்பதனை நினைவிலெடுக்க வேண்டும். எம்மையும் எமது குடும்பத்தையும் நரகநெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளைகளின் இயல்பறிந்து சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டும். அன்பும் அரவனைப்புமுள்ள இடமாக அவ்விடத்தை மாற்ற வேண்டும். உறவுகளை பேணிக்கொள்ள வேண்டும். இது எம்மை சுவனத்துக்கு இட்டுச்செல்லக் கூடிய விடயமாகும்.

8. சமூக விடயங்கள்
அயலவர்கள், நண்பர்கள், ஊர் விவகாரங்கள், அநாதைகள், ஏழைகள், கூட்டாக ஸகாத்தை நிறைவேற்றல், சமூக ஒற்றுமை பேணல்...போன்ற விடயங்களில் ஈடுபாடு காட்டுவான். ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமை பலப்படுத்துகின்றவனாக இருப்பான். கஷ்ட துன்பங்களில் உதவுவான். சமூகத்தை சின்னாபின்னமாக்கி பலவீனப்படுத்த மாட்டான். தனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்புவான்.

எனவே மலர்ந்துள்ள புத்தாண்டை திட்டமிட்டு பயன்படுத்தி சாதனை படைப்போம். உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். என்றும் நலமுடன் நன்றாக இருக்க எம் பிரார்தனைகள்.
 யூ.கே.றமீஸ் (நளீமி)MA (சமூகவியல்)

You may also like ...

குறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..!

பொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்

IPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி!

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்

Also Viewed !

புதிய தொகுப்புகள்