குர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்

இப்போது நீங்கள் குர்ஆனை மனனம் செய்ய முடிவு செய்துள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ், உங்களுடைய முயற்சிக்கு அல்லாஹ் கூலி தருவானாக!

உங்களுடைய வெற்றிக்குத் தேவையான மிக முக்கியமானவைகள், உங்களுடைய எண்ணமும், உங்கள் இலக்கை அடைவதற்கு நீங்கள் எடுத்துள்ள தீர்மானத்தில் எத்தனை உறுதியாக இருக்கிறீர்கள் என்பதும் தான். மிக முக்கியமானது, குர்ஆனை மன்னம் செய்வது அல்லாஹ்வுக்காக மட்டுமே என்ற தூய எண்ணம்.அல்லாஹ் (சுபஹ்) கூறுகிறான்: “(நபியே) நீர் கூறுவீராக: ‘நிச்சயமாக, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியோடு அல்லாஹ்வை வணங்குமாறு நான் ஏவப்பட்டிருக்கிறேன்.’ [குர்ஆன் 39:11]

இரண்டாவதாகதேவையானது, தீர்மானம். ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ...அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமான செயல்கள், அவை குறைவாக இருந்தாலும், தொடர்ந்து செய்யப்படுபவை தான்....’ (புகாரி)

குர்ஆனை மனனம் செய்வது ஒரு சவால். இருப்பினும், அல்லாஹ் ஒரு உத்திரவாதம் தருகிறான்: ‘நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கிறோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? [குர்ஆன் 54:40]

தொடங்குவோம்

கீழுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவுவதற்க்காக கொடுக்கப்பட்டுள்ளன; அவை இரும்பைப்போன்று உறுதியான சட்டங்கள் அல்ல; ஆனால் உங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெற உதவும் குறிப்புகள் தான்.

1.மனப்பாடம் செய்ய வேண்டிய இலக்குகளையும், குறிக்கோள்களையும் நிர்ணயித்தல்

இலக்குகள் என்பவை பொதுவாக நீங்கள் அடையத் திட்டமிடுபவை. மாறாக, குறிக்கோள்கள், ஒரு நாளைக்கு, ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு நீங்கள் அடைய வேண்டிய குறிப்பிட்ட இலக்குகள். தினசரி மனப்பாடம் செய்ய வேண்டிய வரம்பை நிர்ணயிப்பது மிக அவசியம். இல்லையென்றால், உங்களுக்கு அது பெரும் சுமையாகி, உங்களுடைய முயற்சிகள் பலவீனமாகும்.

2.நீங்கள் படிக்க வேண்டிய பகுதியைப் பரிச்சயமாக்கிக் கொள்ளுங்கள்

மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதியைப் படித்து புரிந்து கொள்ளுங்கள், ஏனென்றால் –மேலே கூறியதைப்போல், புரிந்து கொள்ளுதல் தான் மனப்பாடம் செய்வதின் மைல்கல், அதன் பிறகு படிக்க வேண்டிய பகுதி அறிவாற்றலோடு தொடர்பு படுத்தப்படும்.

3. உங்கள் உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

உங்கள் ஓதுதலில் உங்களுடைய முதல் முயற்சி, குர்ஆன் ஓதுவதில் மிகத் தேர்ச்சி பெற்ற ஒருவரின் முன்னிலையில் இருக்க வேண்டும், ஏனென்றால், அதன் மூலம், உங்களுடைய உச்சரிப்பு மற்றும் ஓதுதல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். முதல் பகுதியில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே, அடுத்த பகுதிக்கு நகருங்கள்.

4.படிக்க வேண்டிய பகுதியை குர்ஆனைப்பார்த்து பத்து முறை படியுங்கள்.

பிறகு, குர்ஆனைப்பார்க்காமல் அப்பகுதியை ஓத முயலுங்கள். அதில் தவறிருந்தால், மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்குங்கள். பார்க்காமல் ஓத முடிந்தால் அப்பகுதி உங்கள் மனதில் பதிந்து விட்டது. அதனால் அது உங்கள் நினைவில் ஆழமாக இருக்கும் என்று அர்த்தம் அல்ல. நீங்கள் அவ்வப்போது மனப்பாடம் செய்தவற்றை மீண்டும் மீண்டும் மீள்பார்வை செய்தால் தான் உங்கள் நினைவில் தங்கும்.

5.இவ்வரிகளை மனனம் செய்தபின் அவற்றை மிக நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்..

உங்களுடைய தொழுகையில் ஓத வேண்டும். எங்கிருந்தாலும், முடிந்தபோதெல்லாம், ஓதிக்கொள்ளுங்கள். நீங்கள் பஸ்ஸுக்கு காத்திருத்தல், வரிசையில் நிற்றல் போன்ற நேரங்களில், உங்கள் நினைவில் அதன் இடத்தை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். தினசரி ஓதுதலில், உங்கள் தஜ்வீதை முன்னேற்றுங்கள்.

6.கவனம்! நீங்கள் மனப்பாடம் செய்து கொண்டிருப்பதை முடிக்கும் வரை புதிய வசனத்தை ஆரம்பிக்காதீர்கள். இதுவும் புரிதலுடன் தொடர்புடையது. அல்லாஹ் (சுபஹ்), நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், குர்ஆனை கருப்பொருள் சார்ந்ததாக வகைப்படுத்தியிருக்கிறான். நாம் இந்த ஒற்றுமையை குர்ஆனைப்புரிந்து கொள்வதிலும், மனப்பாடம் செய்வதிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் படித்துக் கொண்டிருப்பதை நீங்கள் ஏற்கனவே படித்தவற்றுடன் தொடர்பு படுத்துங்கள். தகவல்களோடு எத்தனை அதிகமாக உங்கள் மனம் இணைந்திருக்கிறதோ, அத்தனை அதிகமாக நாம் அதை நினைவில் வைத்திருப்பதில் வெற்றியடைவோம்.

7. உறுதியாக இருங்கள்! முற்றிலும் தவிர்க்க முடியாத நிலையிலிருந்தால் தவிர ஒரு நாள் கூட விட்டு விடாதீர்கள். உங்களுடைய இலக்குகளையும், குறிக்கோள்களையும், கவனித்து, உங்களுடைய முன்னேற்றத்தை மாதாந்திர அடிப்படையில் மதிப்பிடுங்கள். இதில் இரு நோக்கங்கள் நிறைவேறும் – தொடர்ந்து முயல வேகத்தையும், உற்சாகத்தையும் பெற முடியும். இருப்பினும், நீங்கள் நிர்ணயித்த வரம்புகளை மீற முயலாதீர்கள்.

8. ஒரே குர்ஆனை உபயோகியுங்கள் நீங்கள் மனனம் செய்து முடிக்கும்வரை ஒரே குர்ஆனைப் பயன்படுத்துங்கள். வேறொன்றைப் பயன்படுத்துவது, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, பயனுள்ள, திறமிக்க நினைவாற்றலுக்கு அடிப்படையான அதனால், புரிந்து கொள்ளுதலை தடுக்கும்.

9. ஒரு பகுதியைப் போலிருக்கும் குர்ஆனின் மற்ற பகுதிகளைப்பற்றி கவனமாக இருங்கள்.
குர்ஆனை மனனம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கும் தொடர்பு படுத்துதலைப் பயன்படுத்திக்கொள்ள இது உதவும்.வசனங்களின் அமைப்பை அடையாளம் காணுங்கள். குர்ஆன் ஒரு முதஷாபிஹாத், அதாவது அதற்கென்று ஒரு உறுதியான அமைப்பு உண்டு. அல் ஹம்துலில்லாஹ், குர்ஆனின் ஒருமித்த கருத்தினால், அல்லாஹ் (சுபஹ்) தொடர்பையும், மீண்டும், மீண்டும் இடம்பெறுவதையும் குர்ஆன் மனப்பாடம் செய்வதில் இணைத்திருக்கிறான். 6000க்கு மேற்பட்ட வசனங்களில் சுமார் 2000வசனங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவைகளாக இருக்கின்றன. வேறுபாடு ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களாக கூட இருக்கும்.

அல்லாஹ் (சுபஹ்) உங்களுடைய முயற்சிகளில் வெற்றியை அளிப்பானாக. ஆமீன். நினைவிருக்கட்டும், பரிசு மிகப்பெரிது.

இப்னு மஸ்’வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எவர் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தைப்படித்தாலும், அவர் கணக்கில் ஒரு நன்மை எழுதப்படும், ஒரு நன்மைக்கு பத்து மடந்து கூலி கிடைக்கும். நான் அலீஃப்-லாம்-மீம் என்பதை ஒரு எழுத்து என்று கூற மாட்டேன், அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து.’ (திர்மிதி)

You may also like ...

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

பித்தப்பை அழற்சி பற்றிய குறிப்புகள்

அறிமுகம்பித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பத

புதிய தொகுப்புகள்