ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

சிரிக்க சிரிக்க சிரிப்பு !!
டாக்டர் : உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும் போல இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..
மனைவி : சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க...
டாக்டர் : 😀😀


ஒருவன் : வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?
மற்றொருவன் : ஆமாம்! இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..
ஒருவன் : 😃😃

ஒருவர் : வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணினீங்க?
வக்கீல் : கேஸ் எதுவும் இல்லையான்னு கேட்டு தினமும் நச்சரிச்சுக்கிட்டு இருந்தா. அந்த எரிச்சல்ல டைவர்ஸ் பண்ணித் தொலச்சிட்டேன்...
ஒருவர் : 😕😕

மாமனார் : மாப்ளே, என் பொண்ணை கிளி மாதிரி வளர்த்துட்டேன். அவளை பத்திரமா பார்த்துக்கோங்க.
மாப்பிள்ளை : கவலைப்படாதீங்க மாமா. வீட்ல அடைச்சி வச்சேன்னா கதவைத் திறந்தே விடமாட்டேன்.
மாமனார் : 😟😟

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன