ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

போலீஸ் : ஏன்டா குடுப்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்க?
ஒருவர் : வெளியில விலை வாசி ஏறிப்போச்சு.. வயிறார சாப்பிட முடியலை.. அதான் சார்...
போலீஸ் : 😂😂


கணவன் : அடியேய், மரியாதையா கிரிக்கெட் மேட்ச் போடு..
மனைவி : முடியாது, என்ன பண்ணுவீங்க??
கணவன் : பாத்துக்கிறேன்..
மனைவி : என்ன பாத்துக்கிறேன்???
கணவன் : நீ எந்த சேனலை போடுறியோ அந்த சேனலை பாத்துக்கிறேன் 😕😕
மனைவி : ஹூம் அது..

டாக்டர் : இது கொஞ்சம் சிரமமான நோய்!
நோயாளி : ஏன் டாக்டர்..
டாக்ரர் : நான் பெயிலான சப்ஜெக்ட்ல இருந்து இந்த வியாதி வந்து இருக்கு!!
நோயாளி : 😥😥

இது உண்மை தானே !!

😇 பைக் வாங்குறப்ப இருந்த சந்தோஷம்..
பெட்ரோல் போடும் போது வர்றதே இல்லை...

😇 சின்ன வயசுல நம்மகிட்ட சில்லறை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம்..
இப்ப கடைக்காரன்கிட்ட சில்லரை காசு இல்லைனா நாம சாக்லேட் திங்க வேண்டியதாயிருக்கு...

😇 உலகிலேயே அதிக பொய்களை கொண்ட இரண்டு லெட்டர்கள்..
Love letter !! Leave Letter !!

இல்லை.. இல்லை.. இல்லை..!!

பிரச்சனை இல்லாவிட்டால்
அவன் மனிதன் இல்லை

கடிந்து கொள்ளாவிட்டால்
அவன் கணவன் இல்லை

சண்டைகள் போடாவிட்டால்
அவர்கள் கணவன் மனைவி இல்லை

அன்பை பொழியாவிட்டால்
அவர்கள் பெற்றவர்கள் இல்லை

தொல்லைகள் தராவிட்டால்
அவர்கள் பிள்ளைகள் இல்லை

நம்மை புரிந்து கொண்டால்
அவர்கள் உறவினர்கள் இல்லை

நம்மை புரிந்து கொள்ளாவிட்டால்
அவர்கள் நண்பர்கள் இல்லை

மனிதர்களை கஷ்டபடுத்தாவிட்டால்
அவர் கடவுள் இல்லை..

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன