ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

கணவன் : என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்க..
மனைவி : கட்டிக்க போரது நான் தானே..!!
கணவன் : துவைக்கிரவனுக்கு தானே கஷ்டம் தெரியும்..
மனைவி : 😁😁


LADY : சார்! என் கணவரை காணம் சார்.
POLICE : கடைசியா அவர எப்போ பாத்தீங்க??
LADY : ரெண்டு நாளைக்கி முன்னாடி இட்லி மாவரைக்க கடைக்கு போனாரு. இன்னும் வீட்டுக்கு வரல சார்.!
POLICE : இரண்டு நாள் ஆச்சா?? அப்போ, இரண்டு நாளா என்ன பண்ணீங்க?
LADY : சப்பாத்தி சுட்டு சாப்பிட்டேன் சார்.

மனைவி : ஏங்க புதுசா வாங்குன பைக்கல என் பெயரை எழுதலாம்ல?
கணவன் : எங்க எழுத?
மனைவி : முன்னாடி எழுதுங்க
கணவன் : இல்லை இல்லை
மனைவி : அப்போ எங்க?
கணவன் : கிக்கர் தான்..
மனைவி : ஏன்?
கணவன் : அப்புறம் எத்தனை நாளுக்கு தான் நான் உதை வாங்குறது..
மனைவி : ???

 

நண்பர் 1 : தினமும் லஞ்ச் ஹோட்டல்ல சாப்டுறியே, புட் பாய்சன் ஆயிடாது? ஏன் சிஸ்டருக்கு சமைக்கத் தெரியாதா?
நண்பர் 2 : அதெல்லாம் சமைப்பா, ஆனா சாப்பிடத்தான் முடியாது..!
நண்பர் 1 : என்னடா சொல்ற?
நண்பர் 2 : டேய் புட் பாய்சன் ஆகலாம்.. ஆனா பாய்சன் புட் ஆகிடக்கூடாது அதான்..!!

அப்பா : என்னடா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே என்னாச்சு?
மகன் : அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப் போயிட்டாங்க...
அப்பா : 😇😇

தம்பி : அண்ணே எனக்கு ஒரு டவுட்டு?
அண்ணன் : என்னடா?
தம்பி : மீன் பிடிக்கறவன் யாருனே?
அண்ணன் : மீனவன்
தம்பி : அப்போ திருடனை பிடிக்கறவன்?
அண்ணன் : ??

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன