ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

கொஞ்சம் சிரிங்க !!

ஆசிரியர் : என்னடா இது நோட்டு புல்லா மணி மணின்னு எழுதி வச்சிருக்க!!!
மாணவன் : நீங்க தானே சார் நேத்து சொன்னீங்க.. நாளைக்கு நோட்டு புத்தகத்த எடுத்து பார்த்தா கையெழுத்து மணி மணியா இருக்கணும்னு.
ஆசிரியர் : ???????


மாணவன் : குட்டி போட்ட பூனை மாதிரி அலையறேன்னு ஏன் சார் சொல்றாங்க....
ஆசிரியர் : கட்டி போட்ட பூனையால அலையமுடியாதே அதான்.
மாணவன் : ?????????

ஒருவர் : ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.
மற்றவர் : ஆமாம்..
ஒருவர் : அப்போ பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
மற்றவர் : ???????

ராமு : என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?
சோமு : ரோட்டுல ஒருத்தன் 500ரூபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!
ராமு : பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?
சோமு : இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க..!!

செருப்புக் கடைக்காரர் ஒருவர், ஒரு புதிய மனிதனை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அன்று முதல் நாள் கடைக்கு செருப்பு வாங்க ஒருவன் தன் தந்தையுடன் வந்தான். புதிய ஆள் அவர்களிடம் பல செருப்புகளைக் காட்டி பின் ஒரு ஜோடி காலணிகளைக் கட்டிக் கொடுத்து, பணத்தை வாங்கி தன் முதலாளியிடம் கொடுத்தான். முதலாளி விபரம் கேட்க, அவன் கூறினான், நூறு ரூபாய் செருப்பைக் காட்டினேன். அவனிடம் ஐம்பது ரூபாய் தான் இருந்தது. சரி, மீதியை நாளை கொண்டு வந்து கொடுத்து விடு என்று கூறி அவனிடம் செருப்பைக் கொடுத்தனுப்பி விட்டேன். முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது. முட்டாளே! செருப்பை எடுத்துச் சென்றவன் திரும்பி வரவா போகிறான்? என்று திட்டினார். அதற்கு வேலையாள் சொன்னான், ஏன் வரமாட்டான்? கண்டிப்பாக வருவான். காரணம் என்ன தெரியுமா? நான் இரண்டும் வலது கால் செருப்பாகக் கட்டிக் கொடுத்து உள்ளேன். அவன் நிச்சயம் வரத்தான் செய்வான்.

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன