ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

மனைவி : உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
கணவன் : அதெல்லாம் சும்மாடி... நம்பாத‌...
மனைவி : ஏன்... ஏன் அப்படி சொல்றீங்க?
கணவன் : என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு.கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?
மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?
கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்...!!

டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு பி பி இருக்கா?
நர்ஸ் : இல்ல
டாக்டர் : பல்ஸ் இருக்கா?
நர்ஸ் : இல்ல
டாக்டர் : சுகர் இருக்கா?
நர்ஸ் : உயிரே இல்ல, அப்புறம் எப்படி இது எல்லாம் இருக்கும்?

காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?
காதலி : (பேச வில்லை)
காதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.
காதலி : (பேச வில்லை)
காதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?
காதலி : பேசாம இரு Count பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.
காதலன் : ?????

இது சிரிக்க மட்டுமே !!

ஒருவன் பழைய கட்டிடத்தின் உள்ளே சென்று கொண்டிருந்தான்.. அப்போது 'அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. 'இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும் போது இவன் சென்றிருக்க வேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..? என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.. 'நான் உன் காவல் தெய்வம்". இவன் அடுத்தபடியாக கேட்டான்,, 'ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன