மைன்ட் ரிலேக்ச் - Please Read

மைன்ட் ரிலேக்ச்

ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடிச்சானே அப்புறமும் ஏன் தொடர்ந்து பாடுறீங்க !!
பாடியவர் : ஒரு செருப்ப வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது? அதுக்குத்தான்.
ஒருவர் : ????????

நண்பன் 1 : எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
நண்பன் 2 : அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.
நண்பன் 1 : ?????????

மனைவி : என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் : நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
மனைவி : ????????

வாழ்க்கைத் தத்துவங்கள் !!

👀 நீ கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்பதில்லை... யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே... நீ கோவிலுக்கு சென்றதற்கு சமம்...!!

👀 நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை... அதில் நிறையை மட்டும் நினை... உன் வாழ்க்கையை வென்று விடலாம்...!!

👀 எவன் உனக்கு உதவி செய்கிறானோ, அவனுக்கு மட்டும் ஒரு நாளும் துரோகம் செய்யாதே... அந்த பாவத்தை நீ எங்கு போனாலும் கழுவ முடியாது...!!

👀 அடுத்தவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லை என்று நினைக்காதே... நம்மை விட வசதியற்றவர்கள் கோடி பேர் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்...!!

👀 பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில், நீ செய்யும் பாவம் புண்ணியம் மட்டுமே உனக்கு மிஞ்சும்... உன்னுடன் கடைசி வரை வருவதும் இதுவே...!!

You may also like ...

அமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு

அமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி

Please await for updates

Please await for updates.. Article will be uploade