மைன்ட் ரிலேக்ச் - Please Read

மைன்ட் ரிலேக்ச்!

டாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச்சதா கேள்விப்பட்டேன் நீங்க முதல்ல என்ன செஞ்சீங்க?
ஒருவர் : உடனே அந்த நாய்க்கு பிரியாணி வாங்கி போட்டேன்.
டாக்டர் : 😕 😕

ஒருவர் : டைப்பிஸ்ட் வேலை கேட்டு வந்திருக்கியே, முன் அனுபவம் இருக்கா?
மற்றவர் : நிமிஷத்துக்கு இருபது பேருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவேன் சார் இது போதுமா சார்.
ஒருவர் : 😇 😇

நர்ஸ் : பேஷண்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தாச்சு ஆனா, மயக்க மருந்து ஸ்டாக் இல்லை டாக்டர், என்ன செய்யறது?
டாக்டர் : ஆபத்துக்குப் பாவமில்லை.. என் கால் சாக்ஸை அவர் மூக்குக்கிட்டே லேசா காட்டிடு!
நர்ஸ் : 😂 😂

 

பிரச்சனைக்கான தீர்வு இதுதான் !!

👉 உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி விட்டு வேலையைப் பாருங்கள்.

👉 விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும்.

👉 அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றி எல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம், அது எப்படியும் சரி செய்து விடும்.

👉 உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதை பொருட்ப்படுத்த வேண்டாம்.

👉 பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்.

👉 உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்.

 

விடுகதைகள் !!

💥 அரை ஜான் ராணி, அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள் அவள் யார்? - வெண்டைக்காய்

💥 அவள் ஒரு பாடகி, ஆனால் அவள் பெண் அல்ல அவள் யார்? - குயில்

💥 இதயம் போல் துடிதுடிக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அவன் யார்? - கடிகாரம்

 

இது எந்த நாடு?

1. அரேபிய தீபகற்பத்தின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள நாடு.

2. இங்கு பாஹ்லா என்னும் நகரம் மண் பாண்டங்களுக்கு புகழ் பெற்றது.

3. இதன் தலைநகர் மஸ்கட்.

4. இதை ஆளும் சுல்தான்தான் மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்பவராக இருக்கிறார். 1970 ஜூலை 23 அன்று தொடங்கிய ஆட்சி இன்றுவரை தொடர்கிறது.

5. இதன் அண்டை நாடுகள் பெட்ரோலியத்தை முக்கிய ஏற்றுமதியாகக் கொண்டிருந்தாலும் இந்த நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீச்சம்பழங்கள், உலோகங்கள்.

6. குறுக்காக வைக்கப்பட்ட கத்திகள் இந்த நாட்டின் சின்னம்.

7. குற்றச் செயல்கள் மிகக் குறைவாக நடைபெறும் நாடு.

8. தலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

9. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிகமாக வாழ்கின்றனர்.

10. இந்த நாட்டில் வருமானவரி வசூலிக்கப்படுவதில்லை.

விடை : ஓமான்

You may also like ...

அமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு

அமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி

Please await for updates

Please await for updates.. Article will be uploade