ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தனை விஷயத்தை நான் சரி செய்ய முடியும் சொல்லுங்க...
சோமு : எதுக்குடா இப்படி சலிச்சுக்கிற?
ராமு : பின்ன என்னப்பா, குண்டூசி எவ்வளவு மெல்லிசா இருக்கு. அதுக்கு போயி குண்டூசின்னு பேர் வெச்சா எப்படி !!
சோமு : 😂😂ராஜ் : சம்மந்தி சார்... பொண்ணு பாக்க மாப்பிள்ளை கூட நாங்க 40 பேர் வருவோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பாங்க. கொஞ்சம் அதுக்கேத்த மாதிரி தயாரா இருங்க.
விக்கி : அப்போ நாளைக்கு வர்றது அலிபாபாவும் 40 திருடர்களும்னு சொல்லுங்க.
ராஜ் : 😌😌


ரம்யா : எப்போதும் அழுதுக்கிட்டே இருப்பாளே உன் பொண்ணு.. இப்போ என்ன பண்றா?
கீதா : அவ பெரிய ஸ்டார் ஆயிட்டா!!
ரம்யா : என்ன சொல்ற.. அந்த அழுமூஞ்சியா?
கீதா : ஆமா... ஒரு மெகா சீரியல்ல அவதான் கதாநாயகியே..
ரம்யா : 😮😮

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

பெண் : சார் நான் மாசமா இருக்கேன்..மேனேஜர் : அதுக்க