ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ஒருவர்: அவர் சீலிங்பேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?
மற்றொருவர்: எப்போ கேட்டாலும், தலைக்கு மேல வேலை இருக்குன்னு சொல்றாரே அதான்!
ஒருவர்: 😝😝நோயாளி: டாக்டர் என் இருதய ஆப்ரேஷனுக்கு சுத்தியை ஏன் கொண்டு வந்திருக்கீங்க?
டாக்டர்: உங்களுக்கு கல் நெஞ்சுன்னு சொன்னாங்களே....
நோயாளி: 😨😨


மந்திரி: இந்த முறை போரில் வெற்றி நமக்குதான்னு எப்படிச் சொல்றீங்க தளபதியாரே..?
தளபதி: மகாராணியார் செய்திருக்கிற தீபாவளி ஸ்வீட்களை ஆயுதமாக எடுத்துக்கொண்டு மன்னர் போருக்குப் போயிருக்கிறாரே அதான்?
மந்திரி: 😇😇


ஒருவர்: புல்லாங்குழல் வாங்கப் போயிட்டு திரும்ப வந்துட்டீங்களே, ஏன்?
மற்றவர்: முழுவதும் ஓட்டையா இருக்கிறதக் கொடுத்தான் வேணாமுன்னு வந்துட்டேன்.
ஒருவர்: 😐😐

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன