தேர்வு முடிந்ததும்,
ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.
விக்கி : இப்போ தானடா காபி அடிச்ச, அதுக்குள்ளயா?
ஆனந்த் : 😂😂

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தனை விஷயத்தை நான் சரி செய்ய முடியும் சொல்லுங்க...
சோமு : எதுக்குடா இப்படி சலிச்சுக்கிற?
ராமு : பின்ன என்னப்பா, குண்டூசி எவ்வளவு மெல்லிசா இருக்கு. அதுக்கு போயி குண்டூசின்னு பேர் வெச்சா எப்படி !!
சோமு : 😂😂

பெண் : சார் நான் மாசமா இருக்கேன்..
மேனேஜர் : அதுக்கு என்னம்மா?
பெண் : நீங்கதானே சொன்னீங்க. மாசமான சம்பளம் தருவேன்னு?
மேனேஜர் : 😐😐

மகன் : அப்பா எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!
அப்பா : அது என்னடா தெய்வீகக் காதல்?
மகன் : என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!
அப்பா : 😠😠

ராணி : என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது?
வாணி : ஒண்ணும் செய்ய வேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்.
ராணி : 😨😨

தொண்டன் 1 : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேன்னு தலைவர் மேடையில பேசுனது தப்பா போச்சு...
தொண்டன் 2 : ஏன் என்னாச்சு...?
தொண்டன் 1 : இப்பல்லாம் கூட்டத்துல யாரும் தக்காளி, முட்டை வீசறதில்லை... பிஸ்கெட் தான் வீசறாங்க....
தொண்டன் 2 : 😟😟

ஆசிரியர் : மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?
மாணவன் : அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.
ஆசிரியர் : 😆😆

மனநல ஆசிரியர் : தம்பி அங்க பாரு பசங்க எல்லாம் பந்த எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விளையாடுறாங்க. நீ மட்டும் இப்படி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு.
மாணவன் : அய்யோ! நான் தான் கோல் கீப்பர் சார்.
மனநல ஆசிரியர் : 😏😏

ஆசிரியர் : தானத்தில் பெரிய தானம் எதுடா ?
மாணவன் : மைதானம் சார் !
ஆசிரியர் : 😡😡

டீச்சர் : உன் நேம் என்ன?
மாணவி : பொன்னி மிஸ்..
டீச்சர் : ஸ்வீட் நேம்..
மாணவி : ஸ்வீட் நேம் இல்ல மிஸ்.. ரைஸ் நேம்..
டீச்சர் : 😋😋

மன்னன் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?
மந்திரி : மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லீட்டான்.
மன்னன் : நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
மந்திரி : அதைத்தான் சொல்லிட்டான்...!
மன்னன் : 😮😮

மாணவன் : குட்டி போட்ட பூனை மாதிரி அலையறேன்னு ஏன் சார் சொல்றாங்க....
ஆசிரியர் : கட்டி போட்ட பூனையால அலையமுடியாதே அதான்.
மாணவன் : 😆😆

திருடன் : மரியாதையா பீரோ சாவியைக் கொடு...
குமார் : இதையே தான் நான் கல்யாணம் ஆனதுல இருந்து என் பொண்டாட்டிகிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்...
திருடன் : 😆😆

இது சிரிக்க மட்டுமே !!

கலா : உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையா கிடந்தாரே... இப்போ எப்படி இருக்காரு...
பிரியா : ஏதோ பரவால்ல... காலையில எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தராரு...
கலா : 😆😆

ஒருவர்: அவர் சீலிங்பேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?
மற்றொருவர்: எப்போ கேட்டாலும், தலைக்கு மேல வேலை இருக்குன்னு சொல்றாரே அதான்!
ஒருவர்: 😝😝

விக்கி : கோபம் வந்தா என் மனைவி அழுதே தீர்த்துடறா.
சேகர் : உன் மனைவி பரவால்ல... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!
விக்கி : 😐😐

ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் சேந்தே இருப்பீங்க..
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லயா, ஜோதிடரே?
ஜோதிடர்: 😆😆😆

விக்கி: டாக்டர்... நீங்க சொன்ன மாதிரியே தினமும் அல்வா சாப்பிடுறேன். ஆனா தொப்ப குறையவே மாட்டேங்குது.
டாக்டர்: வீணாப்போச்சு... நான் தினமும் அளவா சாப்பிடுங்கன்னு சொன்னது உங்களுக்கு காதுல தப்பா விழுந்துருச்சு...
விக்கி: 😒😒

இது சிரிப்பதற்காக மட்டுமே - செயலில் ஈடுபட வேண்டாம்.. !!

ராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன் !
சோமு : அடடா... அப்புறம் ?
ராமு : மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு !
சோமு : 😧😧

மனைவி : என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் : நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
மனைவி : 😇😇

சிரிக்க சிரிக்க சிரிப்பு !!
டாக்டர் : உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும் போல இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..
மனைவி : சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க...
டாக்டர் : 😀😀

ரவி : அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...? ஹார்ட்வேர்னா என்னன்னே....?
மணி : அடே ப்ள டூத் மண்டையா.......'செடி"ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு..... 'மரத்த" புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு........

போலீஸ் : ஏன்டா குடுப்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்க?
ஒருவர் : வெளியில விலை வாசி ஏறிப்போச்சு.. வயிறார சாப்பிட முடியலை.. அதான் சார்...
போலீஸ் : 😂😂

நண்பர் 1 : கம்ப்யூட்டர் வேணும்கறதை உன் காதலி நாசுக்கா கேக்கறாளா? எப்படி?
நண்பர் 2 : உங்களை பார்க்கும் போதெல்லாம் என் இதயம் லேப் டாப்.. லேப் டாப்-ன்னு துடிக்குது டியர்ன்னு சொல்றா..

கணவன் : என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்க..
மனைவி : கட்டிக்க போரது நான் தானே..!!
கணவன் : துவைக்கிரவனுக்கு தானே கஷ்டம் தெரியும்..
மனைவி : 😁😁

கணவன் : என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்க..
மனைவி : கட்டிக்க போரது நான் தானே..!!
கணவன் : துவைக்கிரவனுக்கு தானே கஷ்டம் தெரியும்..
மனைவி : 😁😁

நண்பர் 1 : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..
நண்பர் 2 : அப்போ ராத்திரியில தூங்குனா சிக்ஸ் பேக் வருமா?
நண்பர் 1 : 😇😇

மகன் : அப்பா இந்த சங்கு சக்கரம் பத்திக்கவே மாட்டேங்குது.
அப்பா : டேய் மெதுவா பேசுடா... அது சங்கு சக்கரம் இல்ல... உங்கம்மா செஞ்ச முறுக்கு..
மகன் : 😇😇

கொஞ்சம் சிரிங்க !!

ஆசிரியர் : என்னடா இது நோட்டு புல்லா மணி மணின்னு எழுதி வச்சிருக்க!!!
மாணவன் : நீங்க தானே சார் நேத்து சொன்னீங்க.. நாளைக்கு நோட்டு புத்தகத்த எடுத்து பார்த்தா கையெழுத்து மணி மணியா இருக்கணும்னு.
ஆசிரியர் : ???????

மனைவி : உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
கணவன் : அதெல்லாம் சும்மாடி... நம்பாத‌...
மனைவி : ஏன்... ஏன் அப்படி சொல்றீங்க?
கணவன் : என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு.

மைன்ட் ரிலேக்ச்

ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடிச்சானே அப்புறமும் ஏன் தொடர்ந்து பாடுறீங்க !!
பாடியவர் : ஒரு செருப்ப வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது? அதுக்குத்தான்.
ஒருவர் : ????????

மைன்ட் ரிலேக்ச்!

டாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச்சதா கேள்விப்பட்டேன் நீங்க முதல்ல என்ன செஞ்சீங்க?
ஒருவர் : உடனே அந்த நாய்க்கு பிரியாணி வாங்கி போட்டேன்.
டாக்டர் : 😕 😕