மனைவிக்கு பயந்த‌ அமெரிக்க அதிபர் .

தனது மனைவிக்கு பயந்து புகைப் பழக்கத்தை கைவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சிவில் சொசைட்டி வட்டமேஜை மாநாட்டில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது ஐநா சபை அதிகாரி மைனா கியை ஒபாமாவிடம், "உங்களுக்கு புகைப் பழக்கம் உள்ளதா?' என்று கேட்டார்.

அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த ஒபாமா, "நான் எனது மனைவிக்கு பயந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன்' என்றார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் அவர் அளித்த பேட்டியில், "புகைப்பழக்கத்தை முழுமையாக விட முயற்சிக்கிறேன். மிகவும் குழப்பமான சூழ்நிலையில் என்னால் சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியவில்லை.

எனினும், எனது குழந்தைகள், குடும்பத்தினர் முன்னிலையில் புகை பிடிப்பதில்லை. நான் 95 சதவீதம் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டேன் ' என்று தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு ஒபாமாவின் மனைவி மிசெல் அளித்த பேட்டி ஒன்றில், "எனது கணவர் வெற்றிகரமாக புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டார்.

இதற்கு தங்கள் மகள்கள்தான் முக்கிய காரணம் என்று பெருமிதத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

You may also like ...

அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா

அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு!

அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1

Also Viewed !

புதிய தொகுப்புகள்