உலகின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனமான "அலிபாபாவின் மூலம் அமெரிக்காவில் பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற தனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக அதன் நிறுவன தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார்".
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே வர்த்தக போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் சீனாவின் சின்ஹுவா செய்தி முகமையிடம் பேசிய அவர், "என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வழியேயில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, அலிபாபாவின் முதலீட்டாளர்கள் மாநாட்டில், இவ்விரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தில் நிலவும் குழப்ப நிலை பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஜாக் மா பேசியிருந்த சூழ்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.